தமிழ்நாடு

தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன் !

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்,

"பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். இதுகுறித்து அரசியல் தெளிவு பெற்றவர்கள் பலர் கருத்து மோடியை குறை கூறி இருக்கிறார்கள். அவர் தியானம் பண்ணுவதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நாளை தேர்தல் நடக்க உள்ளது அந்த தேர்தலில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது தேர்தல் விதியை மீறிய செயலாகும். வாக்கு கேட்கின்ற போது மதத்தையோ மதச்சார்பையோ அதற்கான செய்கையையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்து வாக்கு கேட்கக் கூடாது என்பது உத்தரவு. ஆனால் மோடி இதுபோன்று மக்களிடம் மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன் !

உண்மையில் மோடி எதையும் காதில் வாங்குகின்ற நிலையில் அவர் இல்லை. காரணம் அவர் நம்மைப் போல் ஒரு மனிதனாக இருந்தால் காதில் விழும், அவர் ஓர் தெய்வப்பிறவி. அதெல்லாம் அவருக்குத் தெரியாது. அவர் உலகத்திலேயே தெய்வப்பிறவி அவருக்கு ஆயிரம் வேலைகள் இதெல்லாம் காதில் விழுந்து இருக்காது.

மேகதாது அணையை கட்டுகிறேன் என்று கர்நாடகா அரசியல் தலைவர்கள் சொல்வார்கள். திட்டவட்டமாக கட்ட முடியாது என நான் சொல்லுகிறேன். தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. இதற்கு திட்டவட்டமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

இவர்கள் கட்டுவதென்றால் பல தடைகளை கடக்க வேண்டும். ஐந்து குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்அந்தக் குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்று தான் சொல்லுவார்கள். இது ஒரு அரசியல்.அந்த மாநிலத்தில் எப்போதெல்லாம் அரசியல் கிளம்புகிறதோ அப்போதெல்லாம் இது குறித்து இது போல் பேசுவார்கள்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories