தமிழ்நாடு

கட்டணங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்: கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு !

அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும், பாடப்பிரிவுகளுக்கான கட்டணங்களை வெளிப்படையாக அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கட்டணங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்: கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியான நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் குறித்த அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதில் அனைத்து வகை கலை அறிவியல் கல்லூரிகளும் பாடவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்களை உயர்கல்வித்துறை அறிவித்துள்ள www.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டணங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்: கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு !

அதே போன்று மாணவர் சேர்க்கை விதிமுறைகளை 100 விழுக்காடு அளவிற்கு அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களும், மாணவர் சேர்க்கை குழுவுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

அதோடு மாணவர் சேர்க்கையை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கட்டண விபரங்களை சில கல்லூரிகள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories