தமிழ்நாடு

”இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

”இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் 2024 'பாரா அத்லெட்டிக்ஸ்' தடகள விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில், இன்று (21.5.2024) உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கலந்து கொண்டு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

மாரியப்பன் தங்கவேல் அவர்கள் இந்த வெற்றியை ஈட்டுதற்காக மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவர் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories