தமிழ்நாடு

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.17% மாணவர்கள் தேர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 302 மையங்களில் இந்த நடைபெற்றது. தமிழ்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 மாணவர்கள் (91.17%) தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாணவர்களை விட 7.43% அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் அசத்தியுள்ளனர்.

மேலும் 1964 மேல்நிலைப்பள்ளிகள் 100க்கு 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 241 அரசு பள்ளிகள் 100க்கு 100 தேர்ச்சி பெற்றுள்ளன.

அதேபோல் தமிழ் பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171, கணிதம் 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 620, கணக்குப் பதிவியல் 415, பொருளியல் 741, கணினிப் பயன்பாடுகள் 288, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 293 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளன்ர்.

அதோடு, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7504 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories