தமிழ்நாடு

“600க்கு 578; சென்னை அரசுப்பள்ளிகளில் முதலிடம்” - ஏழை மாணவிக்கு உதவிகரம் நீட்டிய எத்திராஜ் கல்லூரி !

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் (578/600) மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதைக்கு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவசமாக படிப்பதற்கான ஆணையை வழங்கினார் எத்திராஜ் கல்லூரி சேர்மன் மைக் முரளிதரன்!

“600க்கு 578; சென்னை அரசுப்பள்ளிகளில் முதலிடம்” - ஏழை மாணவிக்கு உதவிகரம் நீட்டிய எத்திராஜ் கல்லூரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்ற சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் முழு ஸ்காலர்ஷிப்பில் படிப்பதற்கான ஆனையை கல்லூரி நிர்வாகம் வழங்கியது.

பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள் பூங்கோதை என்ற மாணவி சென்னை மாநகராட்சி அளவில் 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். இதை அறிந்த எழும்பூரில் உள்ள எத்திராஜ் தனியார் கல்லூரி அந்த மாணவியை நேரில் அழைத்து முழு உதவித்தொகையும் வழங்கி, பிகாம் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்க்கை காண ஆணையையும் கல்லூரி சேர்மன் மைக் முரளிதரன் வழங்கினார்.

பின்னர் பேசிய மாணவி பூங்கோதை, தனது தந்தை ஆட்டோ ஓட்டுனர் என்றும் மிகுந்த சிரமத்துடன் தன்னை படிக்க வைத்ததாகவும் தெரிவித்தார். அதேபோல் நான் சென்னை மாநகராட்சி அரசு பள்ளியில் பயின்று சாதனை படைத்ததால், மிகவும் பெருமைப்படுவதாகவும், கல்லூரி படிப்பை தொடர்வதற்கு தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories