தமிழ்நாடு

“பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து!

“பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று உலக அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் தங்களின் அம்மா பற்றி சிறப்புகளைக் கூறி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்!

ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories