தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !

சென்னையில் தமிழ்நாடு கல்வி அதிகாரிகளுடன் பீகார் கல்வி அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் :  தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாநில கல்வித்துறை ஆய்வு மற்றும் பயிற்சி ஆலோசனை கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கருத்தரங்கில் பீகார் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 46 மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆலோசனை கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு கல்வித்துறையில் எந்த அளவு வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் இதன் மூலம் எந்த அளவு மக்களின் வாழ்வாதாரம் கல்வியால் உயர்ந்துள்ளது என்பதனை ஆய்வு மேற்கொண்டு அறிந்து கொள்வதற்காக பிஹார் மாநிலத்தை சேர்ந்த கல்வி அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் :  தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !

மேலும் இங்கு தெரிந்து கொண்ட கல்வி முறைகளையும் தமிழ்நாடு பின்பற்றக்கூடிய கல்வி நடைமுறைகளை பீகார் மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு இதனை விரிவுபடுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உள்ளார்கள். 5 சுற்றுகளாக பீகார் மாநில கல்வி அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது .

இதற்கு முன் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், மூன்றாவது சுற்றிற்கான அதிகாரிகள் தற்போது வந்துள்ளனர் அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறையின் அமைப்பு குறித்தும் தமிழக கல்வித்துறையில் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பாட புத்தகங்கள் குறித்தும் பீகார் கல்வித்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

banner

Related Stories

Related Stories