தமிழ்நாடு

“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!

பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் வீட்டு வேலையில் எதுவும் செய்வதில்லை என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தெரிவித்துள்ளார்.

“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்  வருத்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் இணைந்து பல்வேறு ஆளுமைகளின் சொற்பொழிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தி வருகிறது. பொன்மாலைப் பொழுது என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஶ்ரீதேவன் பங்கேற்றார்.

“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்  வருத்தம்!

அப்போது அவர் பேசியதாவது, "பெண்கள் வெளியில் சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், வீட்டு வேலையில் எந்த பங்களிப்பையும் செய்வதில்லை. இந்த மனநிலை மாற வேண்டும். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்;இது தவறானது.

வீட்டு பொறுப்பை, வேலைகளை செய்யும் பெண்களுக்கு மாத சம்பளம் என்று எதையும் நிர்ணயிக்க முடியாது. அவர்களின் உழைப்பும் அக்கறையும் விலைமதிப்பற்றது. நாட்டில் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். மற்ற துறைகளில் இருந்தாலும் நீதித்துறையில் இருப்பது வருத்தத்திற்குரியது. இந்த நிலை மாற வேண்டும்" என்றார்.

banner

Related Stories

Related Stories