தமிழ்நாடு

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி : நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளுக்கு மிரட்டல்!

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமித்து பா.ஜ.க நிர்வாகி வீடுகட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி : நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளுக்கு மிரட்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி ஊசுடு தொகுதி கரசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் பா.ஜ.க ஊசுடு தொகுதி கேந்திர பொறுப்பாளராக உள்ளார். கடந்த 2006-2007 ஆம் ஆண்டு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக

கரசூர் கிராமப் பகுதியில் 749 ஏக்கர் விவசாயம் மற்றும் தரிசு நிலத்தை அரசு கையகப்படுத்தியது. மேலும் கையகப்படுத்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்பட்டது.

இதில் பா.ஜ.க நிர்வாகி செல்வராசு நிலத்தையும் அரசு கையகப்படுத்தி, அவருக்கு சேர வேண்டிய நிலத்தின் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியது.

இந்நிலையில் அரசு கையகப்படுத்திய இடத்தை அபகரித்த பாஜக நிர்வாகி செல்வராசு, வங்கியை ஏமாற்றி ரூபாய் ரூ.50 லட்சம் கடன் வாங்கி அந்த இடத்தில் புதிய வீடு ஒன்றைக் கட்டிவந்துள்ளார். இதுபற்றி அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குச் சென்று இப்பகுதியில் வீடுகள் எதுவும் கட்டக்கூடாது என செல்வராசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் செல்வராசு தொடர்ந்து அரசு நிலத்தில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை இடிக்க ஜேசிபி இயந்திர மூலம் வில்லியனூர் தாசில்தார் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சென்றுள்ளனர்.

அப்போது செல்வராசு அவரது மனைவி சுதா மற்றும் அவரது உறவினர்கள் வீட்டை இடிக்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி செல்வராசு மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 10 பேரைக் குண்டு கட்டாக போலிஸ் வாகனத்தில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் ஜே.சி.பி இயந்திர மூலம் வீட்டின் முன்பகுதியை போலிஸார் இடித்தனர்.

banner

Related Stories

Related Stories