தமிழ்நாடு

யானை பசிக்கு சோளப்பொறியா? : தமிழ்நாடு கேட்டது ரூ.38,000 கோடி - ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.275 கோடி!

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 275 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

யானை பசிக்கு சோளப்பொறியா? : தமிழ்நாடு கேட்டது ரூ.38,000 கோடி - ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.275 கோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன.

அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிடும் வகையில் ஒன்றிய அரசு உடனே தேசிய பேரிடர் நிவாரண நிதி ரூ.38,000 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதியை விடுவிக்கக் கோரி வலியுறுத்தினர். அதேபோல் தமிழ்நாடு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கோரினர். இருந்தும் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காமலிருந்தது.

மேலும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நிவாரண நிதி கோரிக்கையைப் பிச்சை என்று விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”அவங்க அப்பன் வீட்டுப் பணத்தையா நாங்கள் கேட்கிறோம்.. எங்களின் வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம்” பதிலடி கொடுத்து இருந்தார். மேலும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மையப் பேச்சாகப் பேரிடர் நிவாரண நிதியும், நிர்மலா சீதாராமனின் கருத்தும்தான் இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் ரூ. 275 கோடி நிதியை ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ளது. தமிழ்நாடு கேட்டது ரூ.38,000 கோடி. ஆனால் ஒன்றிய அரசு விடுவித்து உள்ளதோ வெறும் ரூ. 275 கோடி. ஒன்றிய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories