தமிழ்நாடு

பூத் ஏஜென்ட் எங்கே பணம்? : பா.ஜ.க செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சி நிர்வாகிகள்!

சென்னையில் பா.ஜ.க மாவட்டச் செயலாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பூத் ஏஜென்ட் எங்கே பணம்? : பா.ஜ.க செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சி நிர்வாகிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென் சென்னை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகத் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி அன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளிலும் பூத் ஏஜெண்டாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்குப் பணம் தரவில்லை என கூறி தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளராக இருப்பவர் முத்து மாணிக்கம். இவர் கடந்த 20 ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பா.ஜ.கவை சேர்ந்த டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உட்பட 5 பேர் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முத்து மாணிக்கத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர் இது குறித்து முத்து மாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து பா.ஜ.கவை சேர்ந்த 8 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories