தமிழ்நாடு

”இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சி!

இந்தத் தேர்தல் களத்தின்ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”இந்தத் தேர்தல் களத்தின்
ஆட்ட நாயகன்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று 21 மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி களம் கண்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

அதேபோல் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெரும் என பல கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. அதேபோலவு தமிழ்நாட்டின் மக்கள் மனநிலையும் இருந்து வருகிறது. அது நேற்று நடந்த வாக்குப்பதிவில் பிரதிபலித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் களத்தின்

ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் என கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தியுள்ளார். இது குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

”மக்கள் வெள்ளம்

மணியான பேச்சு

துருப்பிடிக்காத உற்சாகம்

தகர்க்க முடியாத தர்க்கம்

சொல்லியடித்த புள்ளிவிவரம்

சோர்ந்துவிடாத உடல்மொழி

தற்புகழ் கழிந்த உரை

தமிழர்மீது அக்கறை

இந்தத் தேர்தல் களத்தின்

ஆட்ட நாயகன்

முதலமைச்சர்தான்

முத்துவேல் கருணாநிதி

ஸ்டாலின்தான்

ஒரு பூங்கொத்து” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories