தமிழ்நாடு

”ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் ஜனநாயகம் மலரும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் ஜனநாயகம் மலரட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் ஜனநாயகம் மலரும்” :  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து நாகர்கோவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது Go back மோடி என கூறினோம். இந்த முறை Get out மோடி என கூற வேண்டும். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குசெலுத்தி நீங்கள் மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா?

கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் நாம் இழந்துள்ளோம். முக்கியமாக மொழியுரிமை. மிக்ஜாம் புயல் வந்தது எட்டிக்கூட பார்க்காத மோடி இப்போது அடிக்கடி வருகிறார். மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே வீடு எடுத்து தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க ஜெயிக்க முடியாது.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனது நெருங்கிய நண்பரான அதானிக்கு விற்றுவிட்டார் பிரதமர் மோடி. விமானி இல்லாமல் கூட வெளிநாடு செல்வார் மோடி. ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார்.

மாநில உரிமைகளை பறிக்கும் பாசிச கூட்டத்தையும் உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் விரட்டியடிக்க கை சின்னத்திற்கு வாக்களிப்போம். ஜூன் 4 –ல் இந்தியாவில் ஜனநாயகம் மட்டுமே மலரட்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories