தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் நூல் இரவல் திட்டத்துக்கு வரவேற்பு: அண்ணா நூலகத்தில் அதிகரித்த உறுப்பினர் சேர்க்கை!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூல் இரவில் திட்டம் தொடங்கிய பின்னர் அதிகமானோர் உறுப்பினர்களாக பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் நூல் இரவல் திட்டத்துக்கு வரவேற்பு: அண்ணா நூலகத்தில் அதிகரித்த உறுப்பினர் சேர்க்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறை சார்பில் "நூல் இரவில் திட்டம்" தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் 25க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக புதியதாக உறுப்பினராக பதிவு செய்துவருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக புதியதாக பதிவு செய்துள்ளனர் என அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.அண்ணா நூற்றாண்டுல உலகத்தில் புத்தகங்கள் இரவில் பெறுவதற்கு நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்திருப்பதன் புத்தகங்களை இரவல் பெறுவதற்கான உறுப்பினர் காப்பு தொகை மற்றும் நடைபாண்டிற்கான ஆண்டு சந்தா செலுத்தி இருக்க வேண்டும்.

தனிநபர் ஒருவருக்கு உறுப்பினர் காப்பு தொகை 250 ரூபாயாகவும், ஆண்டு சந்தா 100 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல குடும்பத்திற்கு உறுப்பினர் காப்பு தொகையாக 500 ரூபாயும் ஆண்டு சந்தா 200 ரூபாயும் நிர்ணயித்துள்ளது. அதுபோல வயது முதியவர் ஒருவருக்கு உறுப்பினர் காப்பு தொகை 100 ரூபாயாகவும் ஆண்டு சந்தா 50 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நூல் இரவல் திட்டத்துக்கு வரவேற்பு: அண்ணா நூலகத்தில் அதிகரித்த உறுப்பினர் சேர்க்கை!

மேலும் மாணவ மாணவியர்களுக்கு உறுப்பினர் காப்புத்தொகை ரூபாய் 150 ரூபாயாகவும் ஆண்டு சந்தா 75 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளது.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள் நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம் எனவும், எடுக்கப்பட்ட நூல்கள் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்பட வேண்டும் எனவும், இரண்டு முறை புதுப்பித்தல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக 4 புத்தகங்களும் , குடும்பத்திற்கு 5 புத்தகங்களும், மாணவ மாணவியர்கள் அதிகபட்சமாக 5 புத்தகங்களும், வயது முதியவர்கள் 4 புத்தகங்களை எடுத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நூல் இரவல் திட்டமானது பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வு தயார் செய்ய மாணவர்கள்தயார் செய்ய மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories