தமிழ்நாடு

”மொழிப்போர் தியாகிகளை கொச்சைப்படுத்திய அண்ணாமலையை விரட்டி அடிப்போம்” : கனிமொழி ஆவேசம்!

மதவாத ஆட்சியை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என தூத்துக்குடியில் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

”மொழிப்போர் தியாகிகளை கொச்சைப்படுத்திய அண்ணாமலையை விரட்டி அடிப்போம்” : கனிமொழி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மக்களவை தொகுதில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர் மணி கூண்டு, சண்முக நகர் பேருந்து நிறுத்தம் - கடலையூர் சாலை, வடக்கு திட்டக்குளம், முத்துநகர், சண்முக சிகாமணி நகர் - பசுவந்தளை சாலை, மந்திதோப்பு, ஊத்துப்பட்டி, இடைச்செவல், இனாம் மணியாச்சி ஆகிய இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பேசிய கனிமொழி, "அரசு பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வர்கள், காலை உணவு திட்டம் என திராவிட மாடல் அரசின் சிறப்பான திட்டங்களை எடுத்துரைத்தார்.

ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் நிதியாக அளித்தால் நமக்கு 29 பைசா மட்டுமே நிதி பகிர்வாக அளித்து வருகிறது. ஆனால் ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் இரண்டு ரூபாய் என இரட்டிப்பு நிதி பகிர்வு கிடைக்கிறது. தமிழநாட்டிற்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது.

தமிழ்நாடு கடந்த டிசம்பர் மாதம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி தேர்தல் சமயம் என்றவுடன் 10 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்று உள்ளார்.

தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில், பா.ஜ.கவினர் பேசி வருகின்றனர்.

இந்தி மொழி எதிர்ப்பிற்காக பலதரப்பட்ட போராட்டங்களை ஈடுபடுத்தி உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை அருந்த செருப்பு என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப் படுத்தி இருக்கிறார்.

பா.ஜ.கவும் - அ.தி.மு.கவும் பிரிந்துவிட்டதாக கூறுவது நாடகமானது தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பாஜகவை ஏற்றுக் கொள்ளும், தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி எங்காவது பாஜகவை பற்றியோ, மோடியை பற்றியோ வாய் திறக்கிறாரா?. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான், இரண்டுமே ஸ்டிக்கர் கட்சிகள்.

ஒன்றியத்தில் மக்களுக்கான ஒரு ஆட்சி அமைய வேண்டும், மதத்தால் சாதியால் பிரிவினையை ஏற்படுத்தி வரும் இவர்களை விரட்டி அடிக்க வேண்டும். 40-ம் நமதே நாடும் நமதே என்று கூறிய அவர், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தனக்கு வெற்றியை பெற்று தர வேண்டுமென " என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories