தமிழ்நாடு

"70 ஆண்டுக்கு பிறகு சாதியத்தை மீண்டும் தூக்கிப்பிடிக்கிறது பாஜக" - கமல்ஹாசன் விமர்சனம் !

"70 ஆண்டுக்கு பிறகு சாதியத்தை மீண்டும் தூக்கிப்பிடிக்கிறது பாஜக" -  கமல்ஹாசன் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மீற கூடாது. சந்தர்ப்பம் என்று ஒன்று இருக்கலாம், வாதம் அதுவாக இருக்காது. ரிமோட் எடுத்து அடித்தீர்கள் இப்போது அங்கு சேர்ந்து உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள். ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது, டி வி இன்னும் அங்கு தான் உள்ளது. என் வீட்டு டிவியை நான் அடிக்கலாம்.

ஆனால் கரண்ட் , பேட்டரியை உருவ ஒன்றிய சக்தி முயற்சி செய்து வருகிறது இனி எறிந்தால் என்ன அர்த்தம் அற்றதாகி விடும். பிரதமர் என்றதற்கு மரியாதை குடுப்பேன். ஜாதி சொல்லிக் கொடுக்க கூடியதை கட்சியாக இருந்தாலும் அதை தடுப்பது என் கடமை நான் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன், எனக்கு என்றும் எதிரி சாதியம் தான்

அரசியலில் என் ஒரே எதிரி சாதியம் தான் என்று சொன்ன ஒரே அரசியல்வாதி அதனால் தான் பேட்டி எடுக்க வந்ததாக சொன்னார்கள்.சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் எனக்கு இன்னும் யார் விலங்கிட பட்டு இருக்கிறார்கள் என்று தெரியும். அமெரிக்காவில் சாதியம் வெளியில் தெரியும் இங்கு யாருக்கும் தெரியாது. சதைக்குள் இருக்கும் ரத்தில் இருக்கும்.இதை முதலில் கண்டுபிடித்தவர் காந்தி தான்.

தற்போது அதிருப்தியில் வெளியே சென்றவர்கள் செல்லட்டும்.எங்கு இருந்தாலும், சித்தாந்தத்தின் அடிப்படை புரியும் போது வருவார்கள். சாதி இருக்கிறது ஒப்புக் கொள்கிறேன், அதை நீ மீண்டும் கொண்டு வராதே கூட்டத்தை ஒருமையில் பேசலாம் தவறில்லை, ஒருவரை பேசினால் மரியாதையாக சொல்லலாம்.

"70 ஆண்டுக்கு பிறகு சாதியத்தை மீண்டும் தூக்கிப்பிடிக்கிறது பாஜக" -  கமல்ஹாசன் விமர்சனம் !

அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை. ஏற்கனவே ஐரோப்பாவில் நடந்தவை தான் பாசிச கிளிகள் தான் இங்கு வந்தும் அதே பாட்டை பாடுகிறது. பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து வளர்த்த கிளி நாளை கச்சேரிக்கு வரும், அவர்கள் கச்சேரிக்கு வரவே பயப்படுகிறார்கள்.தலைமை நீதிபதி சந்திர சூட் பேச்சு, செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது, காந்தியடிகள் போல் உள்ளது.உங்களுக்கு புரிய வைக்க வேண்டியது தலைமையின் கடமை, என்னால் செய்ய முடியாததை என்றும் உங்களை நான் செய்ய சொல்ல மாட்டேன் என்னால் செய்ய முடிந்ததை என்னை விட திறம்பட செய்வீர்கள் என்ற நம்பிக்கை உடையவன் நான்

நான் அந்த கூட்டணிக்கு செல்கிறேன் என்பதை விட நாம் போகிறோம். நம்மை கூட்டணி கட்சியினர் பாராட்ட வேண்டும், உங்கள் பணி அந்த அளவுக்கு சிறக்க வேண்டும்.இந்த தேர்தல் முடிவு இப்படி தான் போக வேண்டும் என்று தான் இருக்கிறோம், எப்படி போனாலும் நாம் பாதுகாப்பாக உள்ளோம், நாடாளுமன்றத்தில் நம்மில் ஒருவர் குரல் ஒலிக்கும்.இ வி எம் மெஷின் கோளாறு அல்ல மெஷினை இயக்குபவர் தான் கோளாறு

இ வி எம் மேசின் எப்படி இயங்க வேண்டும் என்பதை மெக்கானிக்கான மக்கள் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் ராமர் அக்னி பரிட்சை போல் இ வி மெஷின் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். சி ஏ ஏ முஸ்லிம்களை தாக்கும் விசியம் மட்டும் அல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது. மதத்தை கேவலமாக பேசவில்லை, நீங்கள் கூடும் இடம் அது அதை நான் கேட்கவில்லை, அவர்களுக்கு கொடுக்க கூடாது அதில் அரசியல் இருக்க கூடாது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories