தமிழ்நாடு

”அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படும் ஆளுநர்” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம்!

அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

”அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படும் ஆளுநர்” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து பொன்முடி சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார். இதைத் தொடர்ந்து அமைச்சராக க.பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களால் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 24 மணி நேரத்துக்குள் பதவியேற்பது குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கெடு விதித்திருந்தது. இதையடுத்து பொன்முடியை பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படுவது என்பதை தனது அடிப்படை கொள்கையாகவே கொண்டிருக்கிறார் தமிழக ஆளுநர். பதவிப்பிரமாணம் செய்ய மறுப்பது. அரசு தயாரிக்கும் கவர்னர் உரையை படிக்காமல் செல்வது. மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட பல சட்டத்திற்கு புறம்பானவற்றை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். இவைகள் "திருடக்கூடாது" என்பது "இந்திய தண்டனைச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று ஒரு திருடன் சொல்வது போல் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories