தமிழ்நாடு

”தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல - தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று இன்று அண்ணா அறிவாலயத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தலுக்கு முன்பாக ஒரு அறிக்கை தயாரித்து - பொறுப்புக்கு வந்தபின் அதனை முழுமையாக நிறைவேற்றிக் காட்டுவதில் முதன்மை இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்துள்ளது. சொன்னதைச் செய்வோம் -

செய்வதைத் தான் சொல்வோம் - என்பது தமிழினத் தலைவர் - முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அளித்த உறுதிமொழி ஆகும். உறுதி மொழி மட்டுமல்ல, எங்களுக்கு வழிகாட்டும் வழிநெறிமுறை அமைந்துள்ளது.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.யைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்து வந்தார்கள். அதனைச் செயல்படுத்தும் திட்டங்களாக மாற்றி தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். எனவே இந்த அறிக்கை என்பது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல - தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக ஆட்சியானது இந்தியாவை அனைத்து வகையிலும் மிகமோசமான வகையில் பாழ்படுத்தி விட்டது.கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்ல, இந்தியாவில் இருந்த கட்டமைப்புகளையும் சிறுகச்சிறுகச் சிதைத்துவிட்டார்கள்.

இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும் என்ற அரசியல் எண்ணத்துடன் இந்தியா கூட்டணி அகில இந்தியா முழுமைக்கும் அமைந்துள்ளது. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக அமைய இருக்கும் புதிய ஆட்சியானது இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை மதிக்கும் ஆட்சியாக அமையும்.

மாநிலங்களை அரவணைத்துச் செயல்படும் ஆட்சியாக அமையும். சமத்துவ - சமதர்ம எண்ணம் கொண்ட ஆட்சியாக அமையும்.அனைவரும் ஒன்று என எண்ணும் சகோதரத்துவ ஆட்சியாக அமையும். மொத்தத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்து - மக்களாட்சி மாண்பைச் செம்மைப்படுத்தும் ஆட்சியாக அமையும். அப்படி அமையக் கூடிய புதிய அரசின் மூலமாக எத்தகைய திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்து தருவோம் என்பதை இந்தத் தேர்தல் அறிக்கையில் விளக்கி இருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தீட்டி வரும் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் செயலையும் செய்ய இருக்கிறோம். அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிக்கையாக இதனைத் தயாரித்துள்ளோம். ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான உன்னதத் திட்டங்களும் இதில் உள்ளன. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களும் உள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்குமான வளர்ச்சித் திட்டங்களும் உள்ளன.

கனிமொழி கருணாநிதி தலைமையிலான இக்குழு மிகச் சிறப்பாக இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைச் சந்தித்து கருத்துக்களை அளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories