தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்துக்கு முதலமைச்சர் அறிவித்த அசத்தலான 9 புதிய அறிவிப்புகள் என்னென்ன ?

ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்துக்கு முதலமைச்சர் அறிவித்த அசத்தலான 9 புதிய அறிவிப்புகள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஈரோட்டிற்கு 9 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு :

* சோலார் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தைவளாகம் அமைக்கப்படும்.

* வ.உ.சி பூங்காவினை, ரூ.15 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

* ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பினை மேம்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்டத்துக்கு முதலமைச்சர் அறிவித்த அசத்தலான 9 புதிய அறிவிப்புகள் என்னென்ன ?

* புதிய மாவட்ட மைய நூலகம் ஒன்று ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* ஈரோடு மாவட்ட அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சி, தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தலமலைஆசனூர் ஊராட்சிகளில் இணைப்புச் சாலை வசதிஇல்லாத மலைவாழ் மக்கள் வசிக்கும் 9 குக்கிராமங்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்தப்படும்.

* 8 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்.

* சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* மஞ்சள் , மஞ்சள் மதிப்புக்கூட்டு பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய சுமார் 5000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன் கிடங்கு வைக்க அமைக்கப்படும்.

* பெருந்துறையில் நொய்யல் ஆற்றின் வடக்குக்கரையில் உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்திட ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories