தமிழ்நாடு

17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : அ.தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது!

திருப்பூரில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : அ.தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசாமி கோயில் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி இசைக் கச்சேரி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியைக் காண்பதற்காக 17 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் வந்துள்ளார்.

பின்னர் தனது மகளை அவரது தோழிகளுடன் விட்டுவிட்டு சிறுமியைத் தாய், வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் மகளைத் தேடிச் சென்றுள்ளார். அங்கு மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடியுள்ளார்.

இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. பிறகு அடுத்தநாள் காலை சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாயாரிடம், தான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த சதீஷ், நவீன்குமார், நந்தகுமார், தினேஷ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் தினேஷ் என்பவர் அதிமுக ஐடி விங் நிர்வாகியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வன்கொடுமை சம்பவம் குறித்து மேலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories