தமிழ்நாடு

3 மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு !

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

3 மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒருநாளிலேயே தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குபடுகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.560.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும், அடிக்கல் நாட்டப்படும், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பணிகளின் விவரங்கள் வருமாறு :

= > முடிவுற்ற பணிகள் :

* தருமபுரி மாவட்டத்தில் ரூ.151.89 கோடி மதிப்பில் 879 முடிவுற்ற பணிகள்,

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.34.10 கோடியில் 41 முடிவுற்ற பணிகள்,

* சேலம் மாவட்டத்தில் ரூ.164.51 கோடி மதிப்பீட்டில் 73 முடிவுற்ற பணிகள் - என மொத்தம் ரூ.350.50 கோடி மதிப்பீட்டில் 993 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

3 மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு !

= > புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு :

* தர்மபுரி மாவட்டத்தில் ரூ.37.44 கோடி மதிப்பீட்டில் 51 புதிய திட்டப்பணிகளுக்கும்,

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.64.56 கோடி மதிப்பீட்டில் 17 புதிய திட்டப்பணிகளுக்கும்,

* சேலம் மாவட்டத்தில் ரூ.12.19 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

= > நலத்திட்ட உதவிகள் :

* தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த 3,856 பயனாளிகளுக்கு ரூ.55.76 கோடி மதிப்பீட்டிலும்,

* கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த 2,206 பயனாளிகளுக்கு ரூ.21.6 3கோடி மதிப்பீட்டிலும்,

* சேலம் மாவட்டத்தை சார்ந்த 2,674 பயனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்கள்.

banner

Related Stories

Related Stories