தமிழ்நாடு

“போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே பாஜக ஆளும் குஜராத்தான்...” - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் !

இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம்தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே பாஜக ஆளும் குஜராத்தான்...” - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் எம்.பி வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் திமுக மீது பொய் குற்றச்சாட்டுகள் வைத்தால் அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்போவாதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “திராவிட முன்னேற்றக் கழகத்தை கலங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. அகில இந்திய அளவிலும் எடுபடாது. பாஜகவினுடைய சர்வாதிகாரப் பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும், நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவிலே அணி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த கொண்டிருக்கிற திமுகவை தேர்தல் களத்தில் கலங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என்று பாரதிய ஜனதா தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு துணையாக அதிமுகவும் துதி பாடிக்கொண்டிருக்கிறது.

வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை வைத்து ஒன்றிய அரசினுடைய விசாரணை அமைப்புகளை வரிசையாக களமிறக்கிவிட்ட பாஜக அரசு, இன்றைக்கு தமிழ்நாட்டிலே திமுக அரசை களங்கப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இப்பொழுது NCB-யை இறக்கி விட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் போதைப்பொருள் தடுப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது.

“போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே பாஜக ஆளும் குஜராத்தான்...” - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் !

திமுகவை NCB வைத்துக்கொண்டு மிரட்டி பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசாரணை அமைப்பின் உடைய துணை இயக்குனர் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார். விசாரணை தொடங்கும் முன்பே அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். திமுகவை கொச்சைப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பை வைத்துக்கொண்டு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் அடைய முடியுமா? என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் அதை மறந்து விட மாட்டார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக ஆட்சியில், அதிமுக அமைச்சரே குட்கா வியாபாரிகளுக்கு துணையாக இருந்தது நாடறிந்த உண்மை. இன்றைக்கு நீதிமன்றத்தில் நாங்கள் போராடி அன்றைய அமைச்சர் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நடவடிக்கை வேண்டும் என திமுகதான் முயற்சித்து வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஒரு பேப்பர் எடுக்கப்படுகிறது. அதில் 85 கோடி ரூபாய் எந்த அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இருக்கிறது .அதிலும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே பாஜக ஆளும் குஜராத்தான்...” - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் !

எந்த வகையிலாவது பாஜகவை தாங்கிப் பிடிக்கலாம் என்று ஒன்றிய அரசினுடைய புலன் விசாரணை அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக் கடமைப்பட்டிருக்கிறோம். ஜாபர் சாதிக்கை பிப்ரவரி 15ஆம் தேதி அன்று தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் பிப்ரவரி 21-ம் தேதி, அவர் ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அப்பொழுது என்சிபி எங்கே போனது?

இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிற அதிமுகதான், ஜாபர் சாதிக்கை அன்றைக்கு காப்பாற்றியது. வருகின்ற அனைவரையும் சோதிக்க பார்க்க முடியாது ஆனால் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஜாபர் சாதிக்கும் அதே போல்தான் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளோம்.

தேர்தல் வருகின்றபோது ஏதாவது ஒரு பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது சுமத்திவிட முடியாதா? என்று ஒன்றிய அரசு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்களுக்கு தெரியும் திமுக என்றைக்கு சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடாது. அதற்கு துணை போகின்றவர்கள் யாரையும் வைத்துக்கொள்ள மாட்டோம்.

“போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே பாஜக ஆளும் குஜராத்தான்...” - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் !

தமிழ்நாட்டை பொருத்தவரைக்கும் போதை பொருள் புழக்கத்தை முழுக்க முழுக்க தடுத்து வைத்திருக்கிறோம். கஞ்சா பொருட்கள் ஒரு சென்ட் கூட விளைவிக்கப்படாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய நாங்கள், போதை பொருள் நடமாட்டத்திற்கு உறுதுணையாக இருக்க மாட்டோம்.

இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்துக்கு காரணமே குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம்தான். தேர்தல் வருகின்றபோது ஏதாவது ஒரு பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது சுமத்திவிட முடியாதா என்று ஒன்றிய அரசு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் ஏமாளிகள் அல்ல அவர்களுக்கு தெரியும்.

தமிழ்நாட்டை அவமதிக்கும் விதமாகவும், தமிழக மக்களையும் அவமதிக்க வேண்டும் என்பதற்காகவும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது பாஜக, அதிமுக. தமிழ்நாட்டைப் போன்ற வளர்ச்சியை எங்களுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை? என்ற கேள்வியை ஒன்றை பாஜக அரசியல் நோக்கியும் மாநில அரசுகளை நோக்கி வட இந்தியா மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய திமுக எம்.பி வில்சன், “இந்த வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவினர் மீது குற்றம்சாட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்.சி.பி டெப்டி டைரக்டர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற பேட்டிகள் கொடுப்பது தவறு. எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல், இது போன்ற குற்றச்சாட்டுகள் வைத்தார்கள் என்றால் அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories