தமிழ்நாடு

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் : திரண்ட ஏராளமான விவசாயிகள் !

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் : திரண்ட ஏராளமான விவசாயிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.

அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.

அந்த வகையில் ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.விவசாயிகள் மீது போலீசார் நடத்திய ரப்பர் குண்டு தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்டு சுபகரன்சிங் என்ற 23 வயது இளம் விவசாயி படுகாயமடைந்தார்.

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் : திரண்ட ஏராளமான விவசாயிகள் !

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநில கௌரவ தலைவர் நீலன் அசோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீடாமங்கலம் ரயில் தண்டவாளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக ரயில்வே டிஎஸ்பி உள்ளிட்ட மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் ரயில்வே போலீசார் 25 பேரும் தமிழக காவல்துறையினர் 35 போலீசாரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories