தமிழ்நாடு

"மகளிருக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" - ப.சிதம்பரம் புகழாரம் !

மகளிருக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

"மகளிருக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" - ப.சிதம்பரம் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாள கிளப் ஆடிட்டோரியத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா சூரியச்சுடர் 60 ஒன்றியத்தின் முதன்மை, தமிழ்நிலத்தின் புதுமை என்ற தலைப்பில் புகழரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன், வி.ஐ.டி.பல்கலைகழகம் ஜி.விசுவநாதன், திரைப்பட நடிகர் அஜய்ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், "இந்தியா கூட்டணியானது தமிழ்நாட்டில் வெற்றிகரமான கூட்டணியாக அமைந்துள்ளது. மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பிறகு தமிழ்நாட்டில் ஆணுக்கு அளிக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் சமமாக வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு மகளிர் மேம்பாட்டுக்காக செய்த காரியங்கள் எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல புரட்சிகரமான திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் அறிமுகப்படுத்தினார்.. மாதம் ஆயிரம் ரூபாய் என்பது சிறிய தொகையாக தெரியலாம். ஆனால் அது சிறிய தொகை அல்ல. அந்த ஆயிரம் ரூபாய் என்பது வீட்டு பெண்களுக்கு விடுதலையை பெற்று தரக்கூடிய ஆயிரம் ரூபாய். நம்மால் ஒரு பொருளை வாங்க முடியும் செலவு செய்யும் முடியும் என்பதே விடுதலை. ஆயிரம் ரூபாய் என்பதை ஆயிரம் ரூபாய் என்று பார்க்காதீர்கள். அது உரிமை தொகை பல உரிமைகளைப் பெற்றுத் தருகிற உரிமைத் தொகை.

வேண்டிய புத்தகங்களை வாங்க முடியும், வேண்டிய பொருட்களை வாங்க முடியும், குழந்தைகளுக்கு நாம் விரும்பிய உடையை வாங்கலாம், தொகை சிறியதாக இருக்கலாம் ஆனால் அந்த உரிமைத்தொகை மூலம் எத்தனை உரிமைகள் கிடைக்கிறது. இதனால் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்து உள்ளனர். சாதி மத கட்சி பேதம் இன்றி அனைவருக்கும் இந்த மகளிர் உரிமைத்தொகையை கொடுத்தார் முதல்வர். அதுதான் வெற்றி, இதுதான் சமுதாயத்தை இணைக்கும், மக்களை இணைக்கும், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை மிகவும் பெருமையாக பார்க்கிறேன்.

"மகளிருக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" - ப.சிதம்பரம் புகழாரம் !

கலைஞரின் கனவு இல்லம், கிராம சாலைகள் மேம்பாட்டிற்காக ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 5000 நீர் நிலைகளை புதுப்பிப்பதற்கு நிதி, ஆயிரம் புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு ஆயிரம் கோடி நிதி என முதல்வர் ஒதுக்கி உள்ளார். கல்வி, மருத்துவம், சாலைகள், நீர்நிலைகள், தூய்மையான காற்று, தூய்மையான நீர் வீடு இதற்குத்தான் ஒரு அரசு செலவு செய்ய வேண்டும். கட்டுமானத்தில் தமிழ்நாடு அரசு மேலும் மேலும் அக்கறை காட்டுகிறது.

பிரதமர் 100 ரூபாய் கேஸ் விலையை குறைத்து உள்ளார். அது வரவேற்க கூடிய ஒன்று தான். இதை குறைத்த நீங்கள், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை 100 ரூபாய் கூட்ட மாட்டோம் என்று பிரதமர் சொல்லி இருக்க வேண்டும். 700 ரூபாயை உயர்த்தி விட்டு 100 ரூபாயை குறைத்தால் இங்கு இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் ஏமாளிகளா? நீங்கள் எல்லாம் ஏமாளி என்று நம்பி தானே இதை அவர்கள் செய்கிறார்கள்.

பாலைவனத்தில் செல்லக்கூடிய ஒட்டகத்தின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றுவார்கள் அதிலிருந்து ஒரு கிளையை மட்டும் எடுத்து ஒட்டகம் பார்க்கும் வகையில் தூக்கி எறிவார்கள் ஒட்டகம் பெரிய சுமையை இறக்கி விட்டார்கள் என சந்தோசப்படும். அது போல தான் சிலிண்டரின் விலையை குறைத்ததும் உள்ளது.மோடி பிரதமராக வந்த போது கச்சா எண்ணெய் விலை குறைந்தது, அப்போதும் அவர் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.நாங்கள் ஏமாளிகள் அல்ல நீங்கள் எங்களை ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டிய நாள் வரும் பொழுது உரத்த குரலில் சொல்லுங்கள்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories