தமிழ்நாடு

“பாஜகவை கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா?” - ஆதித்தமிழர் பேரவை தலைவர் தாக்கு!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிஜேபி,ஆர்.எஸ்.எஸ் கூட்டணி முழுமையாக தோல்வி அடையும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டியளித்துள்ளார்.

“பாஜகவை கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா?” - ஆதித்தமிழர் பேரவை தலைவர் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஆதித்தமிழர் பேரவை மத்திய மண்டலம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியை ஆதரிப்போம், பிஜேபி கூட்டணியை விரட்டியடிப்போம் என்று ஒருமித்த கருத்துடன் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு பின் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் இருக்கக்கூடிய இந்தியா கூட்டணிக்கு ஆதரவை தெரிவிக்கிறோம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிஜேபி, ஆர்எஸ்எஸ் கூட்டணி முழுமையாக தோல்வியடையும். எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் வாங்குவதற்கான முயற்சிதான் அவர்கள் எடுக்க வேண்டும்.

“பாஜகவை கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா?” - ஆதித்தமிழர் பேரவை தலைவர் தாக்கு!

சென்னை, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை சீற்றத்தால் பேரிழப்பு ஏற்பட்டு 37 ஆயிரம் கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் இதுவரை ஒரு சல்லி காசு கூட தமிழகத்துக்கு ஒன்றிய அரசு வழங்கவில்லை. பிரதமர் மோடி, மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். அவர் எந்த முகத்துடன் இங்கு வருகிறார் என்பது தெரியவில்லை.

கருப்பு பணம், ஊழலை ஒழிப்பேன் என்று பல்வேறு வாக்குறுகளை 2014 ஆம் ஆண்டு மோடி அளித்தார். ஆனால் இதற்கு நேர் மாறாக ஒன்றிய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தன்னுடைய நண்பர்களுக்கு தாரை வார்த்து விட்டார். 10 ஆண்டுகளில் இதை நாங்கள் சாதித்து இருக்கிறோம் என்று எதையாவது மோடி அரசு சொல்லிவிட முடியுமா ? ஊழலின் நம்பர் 1 அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.

“பாஜகவை கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா?” - ஆதித்தமிழர் பேரவை தலைவர் தாக்கு!

தேர்தல் வருகிறது என்பதால் கேஸ் விலை 100 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் அதை 500 ரூபாய் ஏற்றி விடுவார்கள். ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எல்லாம் திடீரென உயர்கிறது. தேர்தல் நெருங்குவதால் இதுபோல் நிறைய நடைபெறும்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகமாகி விட்டது என அதிமுக போராட்டம் நடத்துகிறது. ஆனால் போதைப் பொருள் குஜராத் துறைமுகத்திலிருந்துதான் வருகிறது. டன் கணக்கில் இந்தியா முழுவதும் அங்கிருந்துதான் சப்ளை செய்யப்படுகிறது. இதை எதிர்த்து கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அதே கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை பயணிக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதில் ஆதித்தமிழர் பங்கும் இருக்கும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories