தமிழ்நாடு

”மோடி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது” : கோவி செழியன் அதிரடி பேச்சு!

மோடி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது என தமிழ்நாடு அரசு கொறடா கோவி செழியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

”மோடி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது” : கோவி செழியன் அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுக் காலம் ஒன்றிய பா.ஜ.க அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருந்த இயக்கம் தி.மு.க.

பல்வேறு அடக்குமுறைகளைக் கண்டு வளர்ந்த இயக்கம் தி.மு.க. இதனால்தான் தி.மு.க என்ற இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தேர்தலில் நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிக் காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குடும்பத் தலைவிக்கு ரூ.1000 கொடுக்க முடியாது என்று பலரும் கூறினார்கள். ஆனால் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களிலும் நமது அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தி.மு.க அரசு மீது குறைசொல்ல முடியாது என்பதால் இந்துக்களுக்கு எதிரிபோல் தி.மு.கவை பா.ஜ.க கூட்டத்தினர் பொய்யாகச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இந்த மோடி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். திராவிட பூமி தமிழ்நாடு. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்று மகத்தான சாதனை படைக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories