தமிழ்நாடு

"திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள்" - அமைச்சர் அன்பில் மகேஸ் !

திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

"திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள்" -  அமைச்சர் அன்பில் மகேஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மேற்கு மாவட்ட திமுக அண்ணாநகர் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரை ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, சென்னை மாநகராட்சி ஆளுநர் கட்சி தலைவர் ராமலிங்கம், அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளர் பரமசிவம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேரன், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமான இருந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இந்தியா கூட்டணியில் முக்கியமான கட்சி திமுக. நாற்பது நமதே நாடு நமதே என்பது மட்டும் அல்ல 400-ம் நமதே என்று முழங்கும் சூழல் உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலில் மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறது பாஜக. வரும் தேர்தலிகள் விவசாயிகள் போராட்டத்தில் செவிசாய்க்காமல், மாநிலத்திற்கான நிதியை தராமல் ,பி.எம்.கேர் நிதி என்று கொரோனா நிதி வாங்கி கொண்டு மோசடி செய்த பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

"திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள்" -  அமைச்சர் அன்பில் மகேஸ் !

ஆன்மிகத்தை நாங்கள் ஆன்மிகமாக பார்க்கிறோம், ஆனால் பாஜகவினர் அரசியலாக பார்க்கிறார்கள்.இட ஒதுக்கீட்டை பாஜக அரசியலாக பார்க்கிறது.ஆனால் திமுக இடஒதுக்கீட்டை சமூக நீதியாக பார்க்கிறது. திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள்.

மோடி முகத்தில் இப்பொதெல்லாம் பயம் தெரிகிறது.பெரியார், அண்னா, கருணாநிதி,மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பெயரை சொல்ல மோடிக்கு பயம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகிவிட்டார்.இந்த முறை பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் கையில் என்ன தூக்குவார் என்று தெரியவில்லை. புயலுக்கு, வெள்ளத்துக்கு , நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழப்புக்கு வராத மோடி,நாடாளுமன்ற மன்றத்தில் கேள்வி நேரத்துக்கு வராத மோடி, இப்போது தமிழகம் வருவது எல்லாம் தேர்தலுக்காக தான்" என்று விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories