தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : சீர் வரிசையோடு தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : சீர் வரிசையோடு தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திமுக தொண்டர்கள், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு கழக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதோடு இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்டவையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையத்திலும் முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : சீர் வரிசையோடு தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் !

முதலமைச்சர் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதையை செலுத்தினர். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : சீர் வரிசையோடு தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் !

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்புகளை சந்தித்து வாழ்த்து பெறுவதோடு அவர்கள் வழங்கும் அன்பு பரிசுகளையும் பெறுகிறார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் சீர் வரிசையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வருகைத் தந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories