தமிழ்நாடு

முட்டுச்சந்துக்கு வழிகாட்டிய Google Map: நீலகிரியில் கேரள பயணிக்கு நேர்ந்த சோகம்!

நீலகிரியில் Google Mapயை பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்ற கேரள சுற்றுலா பயணிக்கு மோசமான நிகழ்வு நடந்துள்ளது.

முட்டுச்சந்துக்கு வழிகாட்டிய Google Map: நீலகிரியில் கேரள பயணிக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. நீலகிரிக்குச் சுற்றுலா வரும் பயணிகள் கூடலூர் வழியையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் பேர் Google mapயை பயன்படுத்துகிறார்கள்.

இப்படி கூகுள் மேப்பை பயன்படுத்தும் போது பலநேரம் இவர்களுக்கு தவறான வழியை காட்டி ஆபத்தான பகுதிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அண்மையில் கூட கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலா வந்த இளைஞர்கள் Google map செயலியை பயன்படுத்திச் சென்றபோது தவறான வழியைக் காட்டி செங்குத்தான படிக்கட்டுகளில் அவர்களை சிக்க வைத்துவிட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடனே அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா வந்த குடும்பம் ஒன்று Google map செயலியைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு அக்ரஹாரம் பகுதியில் நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் வழிகாட்டியுள்ளது.

அந்த வழியில் சென்றபோது அவர்கள் முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். பிறகு அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் வீட்டின் முகப்பு கதவுகளைத் திறந்து அந்த கார் வெளியே செல்ல உதவி செய்துள்ளனர். தற்போது இதுதொடர்பான CCTV காட்சி வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories