தமிழ்நாடு

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ : திமுக நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் அறிவிப்பு !

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ : திமுக நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுற்குறித்து வெளியான அறிக்கை பின்வருமாறு :

“'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'

பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ : திமுக நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் அறிவிப்பு !

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்.

=> சிறப்புரை - நாள் : 16-2-2024 (வெள்ளிக்கிழமை)

சிவகங்கை : இ.பெரியசாமி

திருநெல்வேலி : கனிமொழி கருணாநிதி, எம்.பி.,

விழுப்புரம் : ஆர்.எஸ்.பாரதி

தூத்துக்குடி : பொன். முத்துராமலிங்கம்

கடலூர் : எஸ்.எஸ்.சிவசங்

திருபெரும்புதூர் : மா.சுப்பிரமணியன்

ஈரோடு : அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாமக்கல் : தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி,

கன்னியாகுமரி : திண்டுக்கல் ஐ.லியோனி

மயிலாடுதுறை : பேராசிரியர் சபாபதிமோகன்

திருவண்ணாமலை : முனைவர் கோவி.செழியன்

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ : திமுக நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் அறிவிப்பு !

=> சிறப்புரை - நாள் : 17-2-2024 (சனிக்கிழமை)

கிருஷ்ணகிரி : பொதுச்செயலாளர் துரைமுருகன்

திருச்சி : கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,

திருப்பூர் : கே.என்.நேரு

அரக்கோணம் : க.பொன்முடி

மதுரை : ஆ.இராசா, எம்.பி.,

விருதுநகர் : கனிமொழி கருணாநிதி, எம்.பி.,

இராமநாதபுரம் : உதயநிதி ஸ்டாலின்

வேலூர் : எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி : மா.சுப்பிரமணியன்

கோவை : அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திண்டுக்கல் : பொன். முத்துராமலிங்கம்

சிதம்பரம் : முனைவர் கோவி.செழியன்

=> சிறப்புரை - நாள் : 18-2-2024 (ஞாயிற்றுக்கிழமை)

திருவள்ளூர் : பொதுச்செயலாளர் துரைமுருகன்

தஞ்சாவூர் : கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,

பெரம்பலூர் : முனைவர் க.பொன்முடி

கரூர் : ஆ.இராசா, எம்.பி.,

புதுச்சேரி : ஆர்.எஸ்.பாரதி

பொள்ளாச்சி : திருச்சி சிவா, எம்.பி.,

காஞ்சிபுரம் : எ.வ.வேலு

தருமபுரி : எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி.,

நாகப்பட்டினம் : எஸ்.எஸ். சிவசங்கர்

தேனி : பொன்.முத்துராமலிங்கம்

நீலகிரி : திண்டுக்கல் ஐ.லியோனி

தென்காசி : சபாபதிமோகன்

சேலம் : தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.,

ஆரணி : முனைவர் கோவி. செழியன்

banner

Related Stories

Related Stories