தமிழ்நாடு

"ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து வெற்றிபெறும் தமிழ்நாடு"- நியூயார்க் டைம்ஸ் பாராட்டு !

தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வியந்து பாராட்டு தெரிவித்துள்ளது.

"ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து வெற்றிபெறும் தமிழ்நாடு"- நியூயார்க் டைம்ஸ் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மிகப்பெரும் சரிவை சந்தித்தது. அதன் பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் தொழிற்துறையில் தமிழ்நாட்டை முன்னுக்கு கொண்டுவர பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு முதலீடுகளாய் ஈர்த்தார். அதன் உச்சமாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒரு லட்­சத்து 90 ஆயி­ரத்து 803 கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டன.

இதன் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு தொழிற்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருப்பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வியந்து பாராட்டு தெரிவித்துள்ளது.

"ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து வெற்றிபெறும் தமிழ்நாடு"- நியூயார்க் டைம்ஸ் பாராட்டு !

இது குறித்து அந்த நாளிதழில் வெளியான செய்தியில், "தேசிய மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் இந்தியாவின் பணிக்கு செல்லும் 43 சதவீத பெண்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவ்வாறு இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தை உண்மையான நன்மையாக மாற்றுவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

7 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு தற்போது தொழில் துறையில் சாதனை படைத்து வருகிறது. தொழில் வளர்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து வேறு வழிகளில் தமிழ்நாடு வெற்றி பெற்று வருகிறது. இந்தியாவின் தேசிய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு மானியம் வழங்கத் தொடங்கியது, புது தில்லிக்கு அடுத்த நொய்டா போன்ற இடங்களில் இதுபோன்ற ஏற்பாடுகளைமேற்கொண்டது.

ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, அந்த ஊக்கத்தொகை அத்தியாவசியமாக கருதப்படவில்லை. தொடர்ந்து அங்கு முதலீடுகள் குவிக்கின்றது. தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே தொழில்துறை சாம்பியனாக செயல்பட்டு வருகிறது. கார் மற்றும் கார் பாகங்கள் உற்பத்தியாளர்களின் நீண்ட பெல்ட் அதன் தலைநகரான சென்னையில் இருந்து கடற்கரை சாலைக்கு கீழே நீண்டுள்ளது.

அதே போல மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோயம்புத்தூரில், மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Vinfast நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை தயாரிக்க 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு முதலீடுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Corning நிறுவனம் ஐபோன் சாதனங்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி ஆர்.பி.ராஜா உற்பத்தி நிறுவனங்களை மட்டும் ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல், அனைத்து வித நிறுவனங்களையும் ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்" என்று கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories