தமிழ்நாடு

பன்முகத் திறன் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் : ஒரு தொகுப்பு !

பன்முகத் திறன் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் : ஒரு தொகுப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

காஞ்சிபுரத்தில் உள்ள ஒலி முகமது பேட்டையில் நெசவுக்குடும்பத்தில் பிறந்தவர் பேரறிஞர் அண்ணா. குடும்ப ஏழ்மைக் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றி பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ., என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்.

கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய பேரறிஞர் அண்ணாவை, தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள் கவர்ந்தன. தந்தை பெரியாருடன் இணைந்தார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார் பேரறிஞர் அண்ணா.

பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, 1962 ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்றத்தில் தென்னகத்தின் உரிமையை நிலைநாட்ட எழுச்சியுரைகளை ஆற்றினார்.

தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக ஆனார்கள். முதலமைச்சராக இருந்தபோதே 3-02-1967-ம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார் அண்ணா.

அவரின் காலத்தில் பன்முகத் திறன் கொண்டவராக அறியப்பட்ட அண்ணாவின் படைப்புகள் ஏராளமான அளவில் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் சில,

பன்முகத் திறன் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் : ஒரு தொகுப்பு !

"அறிஞர் அண்ணாவின் படைப்புகள்....

சிறு கதைகள் -117

புதினங்கள் -6

குறும் புதினங்கள் -25

அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் - 13

திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் - 10

அண்ணா பங்களித்த இதழ்கள் - 11

எழுதிய கவிதைகள் - 77

தம்பிக்கு எழுதிய கடிதங்கள் ( மூவாயிரம் பக்கம்) - 316

மகன் பரிமளத்தால் ஆவணப்படுத்தப்பட்ட கட்டுரைகள் - 1476

ஆங்கிலக் கட்டுரைகள் - 129

ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவுகள் - 400

தமிழ்ச் சொற்பொழிவுகள் - 12775

(சென்னை ) கன்னிமாரா நூலகத்தைக் கரைத்துக் குடித்த அண்ணா என்று சொல்வது உண்மை ஆகும்.

அமெரிக்க மருத்துவமனையில் அறிஞர் அண்ணாவிற்கு அறுவை சிகிச்சை நாள் குறிக்கப்பட்டது. தான் படித்துக் கொண்டிருந்த புத்தகம் ஒன்றை முழுமையாகப் படித்து முடிப்பதற்காக அறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கேற்ப ஒருநாள் அறுவை சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா படித்த அந்த நூலின் பெயர் "THE MASTER CHRISTIAN" என்ற ஆங்கில நூலாகும்.

-கேவிஆர்"

banner

Related Stories

Related Stories