தமிழ்நாடு

பாசிச பாஜக அரசை எதிர்த்து பேரணி... சென்னையில் ஒன்றுதிரண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் !

'United Students of India' கூட்டமைப்பு சார்பில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட 'சென்னைப் பேரணி'யை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

பாசிச பாஜக அரசை எதிர்த்து பேரணி... சென்னையில் ஒன்றுதிரண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாசிச பா.ஜ.க அரசை எதிர்த்து, இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் இடம்பெறும் முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் இணைந்து United Students of India என்ற அமைப்பை உருவாக்கி, "Save EDUCATION Reject NEP; Save INDIA - Reject BJP என்ற முழக்கத்துடன், கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று, டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் வடக்கே நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து, தெற்கே சென்னையில் மாபெரும் மாணவர் பேரணியை United Students of India கூட்டமைப்பு நடத்த முடிவு செய்தது. அதன்படி இன்று சென்னையில் இந்த மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை இராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மைதானம் முதல் ராபின்சன் பூங்கா வரை இந்த மாபெரும் மாணவர் பேரணி நடைபெறும் இந்த பேரணியை, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் இந்திய தேசிய கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர்.

பாசிச பாஜக அரசை எதிர்த்து பேரணி... சென்னையில் ஒன்றுதிரண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் !

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வளைதள பக்கத்தில், “இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.கழகம் - இடதுசாரி - சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பு சார்பில், தேசியக் கல்விக் கொள்கை & நீட் தேர்வுக்கு எதிராகவும், பாசிச பாஜகவை மக்களவைத் தேர்தலில் வீழ்த்தவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட "சென்னைப் பேரணி"யை, கழகம் தொடங்கப்பட்ட ராயபுரத்தில் இந்திய மூவர்ணக் கொடியை அசைத்து இன்று தொடங்கி வைத்தோம்.

தேசிய கல்விக் கொள்கை - நீட் - இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம். INDIA கூட்டணியை வெல்லச் செய்வோம் என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories