தமிழ்நாடு

”மக்களை நாடி வரும் திராவிட மாடல் அரசு” : தமிழ்நாடு முழுவதும் களத்தில் ஆட்சியர்கள்!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் இன்று தொடங்கியது.

”மக்களை நாடி வரும் திராவிட மாடல் அரசு” : தமிழ்நாடு முழுவதும் களத்தில் ஆட்சியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி,தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதோடு அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர்; இல்லம் தேடி கல்வி திட்டம்; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; புதுமைப் பெண்; இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48; முதலமைச்சரின் காலை உணவு; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; கள ஆய்வில் முதலமைச்சர்; மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டுள்ளது.

அதோடு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

”மக்களை நாடி வரும் திராவிட மாடல் அரசு” : தமிழ்நாடு முழுவதும் களத்தில் ஆட்சியர்கள்!

இதனைத் தொடர்ந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார்.

இந்நிலைய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மருத்துவமனை, அங்கன்வாடி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories