தமிழ்நாடு

குடியரசு தின விழா : ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள் !

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை சி.பி.எம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

குடியரசு தின விழா : ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார். மேலும் தமிழ்நாடு ஆளுநர், ஆளுநர் வேலையை தவிர்த்து பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்கலை விவகாரம், திருவள்ளுவருக்கு காவி அணிவித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரம் என தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் புகாரை அப்பட்டமாக தெரிவித்தும் வருகிறார். நேற்றைய முன்தினம் கூட சென்னையில் உள்ள கோதண்டராமசுவாமி கோயிலில் உள்ள பூசாரிகளை தமிழ்நாடு அரசு மிரட்டியுள்ளது என்று மறைமுகமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் இவை போலி என்று, அந்த கோயிலின் அர்ச்சகர்களே முன் வந்து உண்மையை உரைத்தனர்.

குடியரசு தின விழா : ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள் !

அதன்பிறகும் அடங்காமல், நேற்று நடைபெற்ற அண்ணா பல்கலை விழாவில் "மகாத்மா காந்தியின் போராட்டம் வீண். நேதாஜிதான் உண்மையான சுதந்திர போராட்டக்காரர்" என்று காந்தியின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்கும் தற்போது கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக சி.பி.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது நடைமுறையில் இருந்துவரும் ஆளுநர் ஏற்பாட்டை சி.பி.ஐ(எம்) ஏற்கவில்லை. ஒன்றிய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்படுகிற்றார். கூட்டாட்சிக்கு விரோதமாக இருந்துவருகிறார். அப்பட்டமாக அரசியல் செய்துவரும் ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு என சி.பி.ஐ(எம்) பலமுறை கூறியுள்ளது. தொடர்ந்து அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிவருகிறது. எனவே அவருடைய தேநீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை.” என்று குறிப்பிடபட்டுள்ளது.

குடியரசு தின விழா : ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள் !

அதே போல் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டின் குடியரசு தினத்தையொட்டி வருகின்ற (ஜனவரி 26-ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர் மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார். அவரை மாற்ற வேண்டுமென தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பா.ஜ.வின் பார்வையிலான வரலாற்றை அவர் பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

ஆளுநர், அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக (26.01.2024) அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம்.” என்று குறிப்பிடபட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories