தமிழ்நாடு

பாஜக அரசுக்கு முடிவு கட்டுவதற்கான படை சேலத்தில் இருந்து புறப்படுகிறது- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜக அரசுக்கு முடிவு கட்டுவதற்கான படை சேலத்தில் இருந்து புறப்படுகிறது- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. மாநாட்டு திடல் முன்பு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பவள விழா கொண்டாடும் நேரத்தில் தற்போது மாநில இரண்டாவது மாநில மாநாடு நடத்துவது பெருமை. இந்த நிகழ்ச்சியின் மூலம் கழகத்தின் வெற்றி வாய்ப்பு 100 சதவிகிதம் உறுதியாகிவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருக்கும் ஒருவர் தற்போது கோவில்களுக்கு சென்று ஏராளமான பூஜைகள் செய்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் நாம் இங்கு 22 தலைப்புகளில் மாநில உரிமையை மீட்கும் வகையில் மாநாடு நடத்தி வருகிறோம். ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று சேலத்தைதான் உற்று நோக்கி பார்த்து வருகிறது. பாசிச பாஜக அரசுக்கு முடிவு கட்டுவதற்க்கான படை இங்கு இருந்து துவங்குகிறது.

பாஜக அரசுக்கு முடிவு கட்டுவதற்கான படை சேலத்தில் இருந்து புறப்படுகிறது- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டு 15 தொகுதிகளில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு பிறகு அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் அமைக்கும் பணி 100 சதவிகிதம் முடிக்கப்படும். நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் மூலம் 85 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது. தவழ்ந்து தவழ்ந்து முதல்வரான எடப்பாடி மூலமே மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பரித்தது. மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு மேலும் பல்வேறு வழிகளில் பிரித்து வருகிறது.

தமிழ்நாடு 5 லட்சம் கோடி வரிப்பணம் கட்டிய நிலையில் வெரும் 2 லட்சம் கோடியை மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தந்துள்ளனர். அவர்கள் கேட்ட மரியாதையை நான் தந்து விட்டேன். ஆனால் நான் கேட்ட நிவாரண தொகையை ஒன்றிய அரசு இன்னம் வழங்க வில்லை.தமிழ் மேலே நம் உயிர். தமிழை அளிக்க நினைத்தால் தமிழை காக்க இளைஞர் படையினர் உயிரையும் கொடுப்போம்.

சாதி பேதம் அற்ற சமூகம், ஆண் பெண் சமம், பாசிஸ்ட்களை வீழ்த்த வேண்டும் உள்ளிட்ட கலைஞரின் கனவுகளை நினவாக்குவதே நமது லட்சியம். பாசிச சாயத்தை வீழ்த்தி சமூக நீதி வண்ணத்தை பூசுவதே கழக இளைஞர்களின் லட்சியத்தின் முதல் படி. நான் பேருக்குத்தான் இளைஞர் அணி செயலாளர். எப்போதுமே கழக தலைவர்தான் நிரந்தர இளைஞர் அணி செயலாளர். ஆகவே கழக தலைவர் இளைஞர்களுக்கு ஏராளமான பொருப்புகளை வழங்க வேண்டும்" என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories