தமிழ்நாடு

சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு : தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு : தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு இன்று தொடங்கி வரும் ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, “மருத்துவத்தின் எதிர்காலம்” என்கின்ற தலைப்பில் நடைபெறும் “கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மருத்துவ மாநாட்டில்” கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சுகாதாரத் துறையின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையை வலுப்படுத்தவும், மருத்துவ ஆய்வு கட்டுரைகளைப் பற்றி விவாதிக்கவும், மருத்துவத் துறையின் வரலாற்றில் முதன்முறையாக, மருத்துவப் பட்டதாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் செவிலியர், மருந்தியல், மறுவாழ்வு அறிவியல், சுகாதாம் சார்ந்த அறிவியல் ஆகிய துறைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு, “கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மருத்துவ மாநாட்டினை” தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலனுக்காக, ஆரோக்கியமான வாழ்வுக்காக, மக்களைத் தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம் மற்றும் சிறுநீரகம் காப்போம் போன்ற பல மக்கள் நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களைச் சிறந்த முறையில் செயல்படுத்தி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நமது மாநிலத்தை மருத்துவத்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில், பல்வேறு விருதுகளை வென்று, முன்னோடியாக உள்ளது என்பதை நான் இங்கு பெருமையுடன் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக பிற மாநிலங்களுடனும் ஒப்பிடுகையில், உறுப்பு தானத்திற்கான சிறந்த செயல்திறன் விருதையும் நாம் வென்றுள்ளோம்.மேலும் பல சாதனைகளை படைத்து வருகிறோம்.

சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு : தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான மாணவர்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதை மேற்கோள் காட்டுவது மிகவும் முக்கியமானது. இந்தக் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இருந்து, பல நோயாளிகள், மருத்துவ தேவைக்காக தமிழகத்திற்கு வருகிறார்கள். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் பல நோயாளிகளுக்கு தமிழ்நாடு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது. இது தொடர்பாக, ஒரு முக்கியமான மைல்கல்லாக, சுகாதாரத் துறையில் முதலமைச்சர் அவர்கள், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை நமது மாநிலத்திற்கு அழைத்து வந்து அவர்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், ஆராய்ச்சியை மேம்படுத்தவும், பன்னாட்டு அளவிலான ஒரு மருத்துவ மாநாட்டினை நடத்துமாறு அறிவுறுத்தினார்.

அதன் காரணமாக, சட்டமன்றத்தில், மானியக் கோரிக்கை (அ.எண் 99) பன்னாட்டு அளவிளான மருத்துவ மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாடு மூலம், மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவப் பயிற்சியாளர்கள் (7900), பல் மருத்துவம், செவிலியர் மற்றும் சுகாதார அறிவியல் சார்ந்த (3100) ஆகிய 11,000 பிரதிநிதிகள் பயனடைகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, சிங்கப்புர், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 28 புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து 150 பேச்சாளர்கள் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தங்கள் சிறந்த அனுபவத்தையும் மருத்துவ அறிவையும் பகிர்ந்து கொள்கின்றனர். மாநிலம் முழுவதும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ், மாநில அரசின் பள்ளிகளில் பயின்ற, மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட, மருத்துவ மாணவர்களுக்கு முதல் முறையாக மருத்துவக் கல்வி குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் யோகா, தமிழகத்தின் சுகாதார திட்டங்கள், புற்றுநோய் பரிசோதனை, மேமோகிராம், விரைவான சுகாதார பரிசோதனை மற்றும் பரந்த எல்இடி திரையில் பல்வேறு சுகாதார குறிப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தனித்தனி கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories