தமிழ்நாடு

CIBF 2024 : “அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை பன்னாட்டு புத்தக காட்சிக்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CIBF 2024 : “அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரியிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த சென்னை புத்தகக் கண்காட்சி புத்தக வாசிப்பாளர்களுக்கு ஒரு புதையலைப் போன்றது. தாங்கள் படிக்க விரும்பும் புத்தகங்களை மூட்டையாக கட்டி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.

இந்த சூழலில் நடப்பாண்டுக்கான பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளதாக கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி புத்தக வாசிப்பாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், இதுவரை தமிழ், ஆங்கிலம் போன்ற புத்தகங்களை மட்டுமே நமது வாசகர்கள் வாங்கி படித்து வந்தனர். ஆனால் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் உலகில் உள்ள அனைத்து முக்கிய நூல்களும் இங்குச் சங்கமிக்க உள்ளது. இதனால் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பாளர்களுக்கு ஒரு வேட்டையாக இருக்கப் போகிறது.

CIBF 2024 : “அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

இந்த புத்தக திருவிழாவை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இணைந்து நடத்துவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த புத்தக திருவிழாவுக்கான CIBF 2024 என்ற இலச்சினையை (LOGO) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கிய இந்த புத்தக திருவிழா, வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வாசகர்கள் பலரும் இதற்கு வருகை தருகின்றனர்.

இந்த சூழலில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சிக்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு :

“தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம்.

CIBF 2024 : “அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் CIBF2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் நமது அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்.”

banner

Related Stories

Related Stories