தமிழ்நாடு

இறப்பிலும் பிரியாத முதிய தம்பதி : கண்ணீர் விட்டு கதறிய 10 பிள்ளைகள் - சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தென்காசியில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டு கணவனும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இறப்பிலும் பிரியாத முதிய தம்பதி : கண்ணீர் விட்டு கதறிய 10 பிள்ளைகள் - சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரமகாலிங்கம். இவரது மனைவி சிவஞானம்மாள். இந்த மூத்த தம்பதிக்கு 7 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சங்கரமகாலிங்கத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் தந்தையை மகன்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருந்தனர்.

அப்போது, மகனிடம் சங்கரமகாலிங்கம்,'உன் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது' என கூறியுள்ளார். இதனால் தந்தையை மருத்துவமனையிலிருந்து மகன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே உடல்நிலை குறைவால் வீட்டிலிருந்த சிவஞானம்மாள் உயிரிழந்துள்ளார். இந்த தகவலைத் தந்தையிடம் சொன்னால் அவர் கடுமையாக உடைந்து விடுவார் என நினைத்து மகன் தாய் இறப்பு செய்தியைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.

பிறகு வீட்டிற்கு வந்தபோதுதான் மனைவி இறந்த உடலைப்பார்த்து சங்கரமகாலிங்கம் கதறிக் கதறி அழுதுள்ளார். பின்னர் அன்று மாலையே துக்கம் தாங்காமல் சங்கரமகாலிங்கமும் உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அடுத்தடுத்து இறந்ததைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

banner

Related Stories

Related Stories