தமிழ்நாடு

”ராமர் கோயிலை வைத்து சிறுபான்மை மக்களை நசுக்க பார்க்கும் மோடி அரசு”: முன்னாள் நீதிபதி சந்துரு விமர்சனம்!

ராமர் கோயிலை வைத்து சிறுபான்மை மக்களை மோடி அரசு நசுக்கப் பார்க்கிறது என முன்னாள் நீதியரசர் கே. சந்துரு விமர்சித்துள்ளார்.

”ராமர் கோயிலை வைத்து சிறுபான்மை மக்களை நசுக்க பார்க்கும் மோடி அரசு”: முன்னாள் நீதிபதி சந்துரு விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் "முத்தமிழ் அறிஞர்.. நாவன்மை நாயகர்.." என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் நீதியரசர் கே.சந்துரு, சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன், தி.மு.க நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் ஓ.ஏ. நாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் நீதியரசர் சந்துரு, "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் புகழ வேண்டும் என்றால் இன்னும் 200 ஆண்டுகள் வரை அவரைப் பற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்குத் தமிழ்நாட்டிற்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அதை வெற்றி கரமாகச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

”ராமர் கோயிலை வைத்து சிறுபான்மை மக்களை நசுக்க பார்க்கும் மோடி அரசு”: முன்னாள் நீதிபதி சந்துரு விமர்சனம்!

அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதில் என்ன பெருமை இருக்கிறது. ராமருக்கு இந்த நாட்டில் கோவிலே இல்லையா?. ராமர் என்ற குறியீட்டை வைத்து சிறுபான்மை மக்களை மோடி அரசு நசுக்கப் பார்க்கிறது. கலைஞர் சிறப்பு தொடர வேண்டும் என்றால் இந்த காவி கும்பலை நாம் இந்தியாவிலிருந்தே வெளியேற்ற வேண்டும்.

மதம், மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பா.ஜ.கவிற்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். சமூகநீதியை நிலைநாட்டிய அரசு என்றால் அது தி.மு.க அரசுதான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகமான பொருளாதார வளர்ச்சி தமிழ்நாடு அடைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories