தமிழ்நாடு

நெஞ்சில் ஈரமுள்ள தி.மு.க அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் ரசிகர்கள் - பொதுமக்கள் நன்றி!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்ட பரியா விடை நிகழ்வுக்கான முழு ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்திருந்தது.

நெஞ்சில் ஈரமுள்ள தி.மு.க அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் ரசிகர்கள் - பொதுமக்கள் நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின்னர் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

பின்னர் சாலிகிராமத்தில் இருந்து விஜயகாந்த் உடல் தே.மு.தி.க கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அஞ்சலி செலுத்த அதிகமான மக்கள் வந்து கொண்டே இருந்தனர். இதனால் பொதுமக்கள் சிரமம் இன்றி அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடலை தீவுத்திடலில் வைக்க அரசு அனுமதி கொடுத்தது. இதற்கான கட்டணத்தையும் அரசு வசூலிக்கவில்லை.

மேலும் பொதுமக்கள் நெருக்கடி இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு அங்கு குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நெஞ்சில் ஈரமுள்ள தி.மு.க அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் ரசிகர்கள் - பொதுமக்கள் நன்றி!
நெஞ்சில் ஈரமுள்ள தி.மு.க அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் ரசிகர்கள் - பொதுமக்கள் நன்றி!

பின்னர் தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் ஊர்வலகமாக எடுத்து செல்வதற்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் போலிஸார் செய்து இருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான கூட்டத்திற்கு இடையேயும் விஜயகாந்த் உடல் சிரமம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டது.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திவிட்டு இரண்டு நாட்களாக விஜயகாந்த் இறுதி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார். பின்னர் முதலமைச்சரின் அறிவிப்பு படியே முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்விலும் முதலமைச்சர் பங்கேற்று தனது நண்பனுக்கு கம்பீரமாக பிரியா விடை கொடுத்தார்.

தி.மு.கவுக்கும், தே.தி.மு.திகவுக்கும் எத்தனையோ அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு நண்பனுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்தை பார்த்து கேப்டன் ரசிகர்களும், பொதுமக்களும் தி.மு.க அரசை பாராட்டி வருகிறார்கள். இந்த கண்ணியம் தான் பக்குவப்பட்ட அரசியல். இதெல்லாம், இறுதி நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு முதல் ஆளாக வந்து அமர்ந்து கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டத்துக்கு புரியாது. புரிய வேண்டும் என்ற பேராசையும் நமக்கு கிடையாது.

banner

Related Stories

Related Stories