தமிழ்நாடு

”நட்புக்கு இலக்கணம் கேப்டன்” : விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

”நட்புக்கு இலக்கணம் கேப்டன்” : விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையைச் சேர்ந்த இவர், 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்த இவர், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில், இதனால் 2011 - 2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

அதன் பின்னர் இவரது உடல்நிலை பாதிப்பால் அரசியலில் சற்று விலகி இருந்தார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையிலிருந்து வந்த அவருக்கு கொரோனா மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த விஜயகாந்த் உடலுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், இந்திய சினிமா பிரபலங்களும், கட்சி தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

”நட்புக்கு இலக்கணம் கேப்டன்” : விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

பின்னர் இன்று அதிகாலை பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாலையிலிருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் சென்று விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திப் பிரியா விடை கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஜயகாந்தின் மறைவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். விஜயகாந்த் கோபத்துக்குப் பின்னால் நியாயமான ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர். விஜயகாந்த் நட்புக்கு இலக்கணமானவர், சுயநலமில்லாதவர்.

71(வயது) பந்துகள். அதில் பவுண்டரி, சிக்கர்கள் விளாசி 100 அடித்தவர். கேப்டன் என்பது அவருக்குப் பொருத்தமான பெயர். விஜயகாந்தின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த் போன்றோர்தான்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories