தமிழ்நாடு

"கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்" : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்" : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். இதனைத் தொடர்ந்து மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.

நடிகர் சங்கத் தலைவராகவும் - எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் - அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் - தே.மு.தி.க தொண்டர்கள் - நண்பர்கள் - திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories