தமிழ்நாடு

என் நண்பன் வாழ்க்கையை இயற்கை எடுத்துக் கொண்டது : விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

என் நண்பன் வாழ்க்கையை இயற்கை எடுத்துக் கொண்டது : விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து சிகிச்சை ஓய்வு என்று விஜயகாந்த் இருந்தார். 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இங்கு இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் நடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இன்று விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து மறைந்த விஜயகாந்த் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அரவது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில் "விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories