தமிழ்நாடு

”மக்களை காக்கும் பணியில் ஓய்வின்றி பணியாற்றும் முதலமைச்சர்” : குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு!

மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

”மக்களை காக்கும் பணியில் ஓய்வின்றி பணியாற்றும் முதலமைச்சர்” :  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும், இது முடிந்த சில நாட்களிலேயே திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் பெய்த கனமழையாலும் மக்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 100 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

இப்படி அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது. உடனே மக்களை மீட்க அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கிடையில் மிக்ஜாம் புய கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு, 90% மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதோடு தென் மாவட்டங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் முழுமையாக மீட்புப் பணி முடிந்த பிறகு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

”மக்களை காக்கும் பணியில் ஓய்வின்றி பணியாற்றும் முதலமைச்சர்” :  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு!

இதற்கிடையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்து நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டினார்.

banner

Related Stories

Related Stories