தமிழ்நாடு

”மிக்ஜாம் புயல் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாத்த தமிழ்நாடு அரசு” : ஒன்றியக் குழு பாராட்டு!

மிக்ஜாம் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டு உள்ளது என ஒன்றியக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

”மிக்ஜாம் புயல் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாத்த தமிழ்நாடு அரசு” : ஒன்றியக் குழு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

“மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர் பெருமக்களும், 50-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர்.

மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி தமிழ்நாடு அரசு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொண்டதால் மக்கள் பெரிய ஆபத்துகளில் இருத்து காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீள இடைக்கால நிவாரணமாக ரூ,5060 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து ஒன்றிய அரசு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கியுள்ளது.

”மிக்ஜாம் புயல் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாத்த தமிழ்நாடு அரசு” : ஒன்றியக் குழு பாராட்டு!

மேலும் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வந்து வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து இன்று ஒன்றிய குழுவினர் இன்று சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள். வட சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு, வியாசர்பாடி, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய குழு உறுப்பினர் எ.கே.சிவ் கேர், "ஒன்றிய அரசு மூலம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னையில் உள்ள ஐந்து இடங்களுக்கு ஆய்வு மேற்கொண்டோம். மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்த ஆய்வு மூலம் தெரிகிறது.

இந்த ஆய்வுகளை கணக்கிட்டு சேதமான பகுதிகளையும், மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு இன்னும் ஒரு நாட்களில் ஒன்றிய அரசிடம் வழங்கப்படும். கன மழை பெய்தாலும் இரண்டு நாட்களில் தமிழ்நாடு துரித நடவடிக்கையால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சி பணியாற்றினார் மேற்கொண்டு பாராட்டுக்குரியது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories