தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் பாதிப்பு : சென்னையில் 100% மின் விநியோகம் எப்போது ? - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா !

சென்னையில் நாளை மாலைக்குள் 100% மின் விநியோகம் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : சென்னையில் 100% மின் விநியோகம் எப்போது ? - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மாநகராட்சி ஊழியர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் துறை செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : சென்னையில் 100% மின் விநியோகம் எப்போது ? - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா !

அப்போது சிவ்தாஸ் மீனா பேசியதாவது, "மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து 95% இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தூய்மை பயணியர்கள் 3000 பேர் பணி மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் கொடுக்காத பகுதிகளில் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இன்று மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், எம் கே பி நகர் உள்ளிட்ட பகுதிகள், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் சில இடங்களில் மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் அனைத்து துணை மின் நிலையங்களுக்கும் 100% முழுவதுமாக மின்சாரம் கொடுக்கப்படும். சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் உள்ள பகுதிகளில் பம்ப் மூலமாக எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : சென்னையில் 100% மின் விநியோகம் எப்போது ? - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா !

இன்று காலை, மதியம் என மொத்தம் 3 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 1,442 மரங்கள் விழுந்த நிலையில், 1,199 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளவை இன்று இரவுக்குள் சரிசெய்யப்படும். சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராகி பயன்பாட்டில் உள்ளது. சென்னையில் இன்று 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு பிறகு தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நாளை மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் உள்ள தண்ணீர் அகற்றப்படும். 150 நடமாடும் காய்கறி கடைகள் கூட்டுறவுத்துறை சார்பாகவும் தோட்டக்கலை சார்பாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்றிய குழு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பிறகு, நாம் கேட்ட இருந்த நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பொது மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் 99.87 சதவீதம் பகுதிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு இன்று இரவுக்குள் மின்சாரம் கொடுக்கப்படும்" என்றார்.

banner

Related Stories

Related Stories