Tamilnadu

🔴 #LIVE : #WeatherUpdate : கனமழை குறித்த செய்தி, அரசின் அறிவிப்புகளை அறிய இங்கே இணையுங்கள் !

🔴 #LIVE : #WeatherUpdate : கனமழை குறித்த செய்தி, அரசின் அறிவிப்புகளை அறிய இங்கே இணையுங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on
4 December 2023, 10:56 AM

முதலமைச்சரை தொடர்பு கொண்ட அமித் ஷா !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் !

அப்போது கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும், உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

4 December 2023, 10:37 AM

அண்ணா பல்கலை. தேர்வுகள் ரத்து !

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (5-12-23) முதல் வரும் சனிக்கிழமை வரை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து. - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

4 December 2023, 10:24 AM

ஆந்திராவை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்!

மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ - 100 கி.மீ வரை வீசக்கூடும் !

4 December 2023, 10:07 AM

களத்தில் அமைச்சர் உதயநிதி !

சென்னையில் மிக்ஜாம் புயலால் காற்றுடன் அதிகனமழை பெய்து வரும் நிலையில் ரிப்பன் மாளிகை, ஜி.பி. சாலை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு !

4 December 2023, 09:38 AM

புழல் ஏரியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு!

மிக்ஜாம் புயல் காரணமாக புழல் ஏரியில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் மூர்த்தி !

4 December 2023, 08:50 AM

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.!

“சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மட்டும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களைக் கொண்டு செயல்பட வேண்டும்."

- தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.!

4 December 2023, 08:34 AM

அடாத மழையிலும், விடாத உழைப்பு!

“மிக்ஜாம் புயலை பொருட்படுத்தாமல் மக்களுக்கான அன்றாடச் சேவைகளில் ஒன்றான பால் விநியோகம் தடைபடாமல் செயல்படுத்தப்பட முனைப்போடு செயலாற்றும் ஆவின் ஊழியர்கள், முகவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!”

- அமைச்சர் மனோ தங்கராஜ்.

4 December 2023, 08:09 AM

வரலாறு காணாத கனமழை!

சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் சுமார் 34 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது! 2015-ல் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது பதிவான மழை அளவு 33 செ.மீ இருந்த நிலையில், தற்போது 34 செ.மீட்டரைக் கடந்து மழை பெய்து வருகிறது!

4 December 2023, 08:00 AM

அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளை, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு!

4 December 2023, 07:51 AM

6 ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது!

“செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், உள்ளிட்ட 6 ஏரிகள் 98% முழுமையாக நிரம்பியுள்ளது. சென்னை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.”

- நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி!

4 December 2023, 07:40 AM

தீவிரப்புயலாக வலுபெற்றது ‘மிக்ஜாம்’ புயல்!

4 December 2023, 07:28 AM

சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நெருங்கி அதுகள் வரும் மிக்ஜாம் புயல், தீவிர புயலாக வலுபெற்றது! புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. - 100 கி.மீ. வரை வீசக்கூடும்!

மழை நின்றவுடன் மின்சாரம் வழங்கப்படும்!

3 December 2023, 07:02 AM

“மழை நின்றவுடன் உடனடியாக மின்சாரம் சீராக வழங்கப்படும். களத்தில் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மரம் விழுந்த இடங்களில் மின் சேவையை சீராக்கும் பணியில் மின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்”

- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

சேதமான சாலைகள் சரி செய்யப்படும்!

“மழையை எதிர்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அதிகாரிகள் யாரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை. அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். மழை முடிந்த பிறகு சேதமான சாலைகள் சரி செய்யப்படும்!” - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

🔴 #LIVE : #WeatherUpdate : கனமழை குறித்த செய்தி, அரசின் அறிவிப்புகளை அறிய இங்கே இணையுங்கள் !
3 December 2023, 07:02 AM

அமைச்சர் கே.என்.நேரு நேரடி ஆய்வு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கோடம்பாக்கம் மண்டலம், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கமின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையினை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்!

🔴 #LIVE : #WeatherUpdate : கனமழை குறித்த செய்தி, அரசின் அறிவிப்புகளை அறிய இங்கே இணையுங்கள் !
3 December 2023, 07:02 AM

பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை!

“பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து உபகரணங்களுடன் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையினர் தயாராக இருக்கிறார்கள். மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது.” - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

🔴 #LIVE : #WeatherUpdate : கனமழை குறித்த செய்தி, அரசின் அறிவிப்புகளை அறிய இங்கே இணையுங்கள் !
3 December 2023, 06:58 AM

புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயார்!

சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தீயணைப்பு துறை டி.ஜி.பி ஆபாஷ் குமார் ஆகியோர் தயார் நிலையில் உள்ள வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, வங்கக் கடலில் புயல் உருவாகி இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புகள் புயல் பாதிப்புகள் இருக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் அதனை எதிர்கொள்வதற் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். மேலும், மழை பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள எல்லா உபகரணங்களும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் வைத்து இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதால் பெரிய அளவில் மழையினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து செயலாற்றி வருவதாக கூறினார்.

பாதிப்பு எந்தெந்த இடங்களில் ஏற்படுகிறது என்பதனை கண்டறிவதற்காகவும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்காகவும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது அதே போல ஏரிகளில் இருந்து தண்ணீர் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பது தொடர்பாக தொடர்ச்சியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், காற்று மழை அதிகமாக இருக்கும் பொழுது பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மயிலாப்பூரில் இருக்கக்கூடிய தீயணைப்பு மீட்பு துறை நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட மீட்பு படை வீரர்கள் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண பணி உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் 364 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் (பிரத்யோகமாக மூன்று மீட்பு பணி நிலையங்கள்) 6473 அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போர்க்கால அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி பெற்ற 20 தீயணைப்போர்கள் கொண்ட நீச்சல் மற்றும் கமாண்டோ வீரர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

3 December 2023, 04:27 AM

உருவானது மிக்ஜாம் புயல்!

“தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக் ஜாம் புயலாக வலுப்பெற்றது. கரையை கடக்கும் போது காற்றின் வேகமானது 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையறுக்க கூடும்”

1 December 2023, 02:45 PM

புயல் எச்சரிக்கை காரணமாக வரும் 4 ஆம் தேதி திங்கட்கிழமை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை -கல்வித்துறை அறிவிப்பு

1 December 2023, 01:56 PM

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்நாளை தென் மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறி, வரும் 5 ஆம் தேதி ஆந்திரா - மசூலிப்பட்டிணத்திற்கு இடையே கரையை கடக்க உள்ளது. - இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்...

1 December 2023, 11:37 AM

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அடையாறு கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

1 December 2023, 11:29 AM

நாளை (2-12-23) சென்னை மாநகராட்சி பகுதியில் 100 இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும் 2000 இடங்களிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதேபோல நாளை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் நடைபெறும். -மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு

1 December 2023, 11:26 AM

#WeatherUpdate : வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் வருகின்ற 5-ம் தேதி நெல்லூருக்கு மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மையம் 

#WeatherUpdate : வடகடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் ,புயல் எச்சரிக்கை குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழக டிஜிபி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் எஸ். கே பிரபாகர்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 14 மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்

banner

Related Stories

Related Stories