தமிழ்நாடு

பொதுமக்களுக்கு இடையூறாக கட் அவுட் வைத்த அதிமுக: அகற்றச் சொன்ன காவல்துறையை மிரட்டி எஸ்.பி.வேலுமணி அராஜகம்!

கோவையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட கட் அவுட்டை அகற்றச் சொன்ன போலிஸாரை எஸ்.பி. வேலுமணி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாக கட் அவுட் வைத்த அதிமுக: அகற்றச் சொன்ன காவல்துறையை மிரட்டி எஸ்.பி.வேலுமணி அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் நடைபெறும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்காக பழனிசாமியை வரவேற்கும் விதமாக காவல்துறையின் அனுமதியின்றி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அ.தி.மு.கவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என அ.தி.மு.கவினரிடம் வலியுறுத்தினர். ஆனால் பேனரை அகற்ற மறுத்து போலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பேனர்களை அகற்ற முடியாது என வாக்குவாதம் செய்தார்.

பொதுமக்களுக்கு இடையூறாக கட் அவுட் வைத்த அதிமுக: அகற்றச் சொன்ன காவல்துறையை மிரட்டி எஸ்.பி.வேலுமணி அராஜகம்!

அப்போது வேலுமணி, " காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இங்கு என்னால் வரவைக்க முடியும். நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற கொறடா. உங்களுக்குப் பிரச்சனை என்றால் உயர் அதிகாரியை வரச் சொல்லுங்கள்" என காவல்துறையினரை மிரட்டியுள்ளார். மேலும், வேலுமணியுடன் இருந்த சூலூர் அ.தி.மு.க எம்எல்ஏ கனகராஜ் மற்றும் அதிமுகவினரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க பேனர்களால் பலர் உயிரிழந்த நிலையில், அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பேனர்கள் வைத்து மக்கள் உயிரைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தங்கள் தலைவரை பெருமைப்படுத்துவதற்காக இப்படி நடந்து கொள்வது அப்பகுதி இச்சம்பவம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories