தமிழ்நாடு

”துரோகியே திரும்பி போ” : பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுந்த கோஷம்!

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

”துரோகியே திரும்பி போ” :  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுந்த கோஷம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை என பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பசும்பொன் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போதும் அங்கு கூடியிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். 'துரோகியே திரும்பிப்போ என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக இங்கே வராதே' என்றும் அவர்கள் முழக்கங்கள் செய்தனர்.

இதையடுத்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியாமல் மவுனமாக அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories